கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்


கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்
x
தினத்தந்தி 8 May 2021 12:51 PM GMT (Updated: 2021-05-08T18:21:57+05:30)

நடிகை காஜல் அகர்வால் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்டார். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

மும்பை,

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.வருகின்றன.

தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் இணையத்தொடரிலும் நடித்தார். காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் - படம் பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலும் அவருடைய கணவர் கெளதம் கிச்லுவும் மும்பையில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள். வாய்ப்பிருக்கும்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று டுவிட்டரில் காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Next Story