படமான ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ படம் திரைக்கு வருவது எப்போது?


படமான ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ படம் திரைக்கு வருவது எப்போது?
x
தினத்தந்தி 8 May 2021 11:15 PM GMT (Updated: 8 May 2021 7:41 PM GMT)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, ‘தலைவி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது.

தேசிய விருது பெற்ற பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி நடிக்க, மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி வேடத்தில் நாசர் நடித்துள்ளார். கிரீடம், மதராச பட்டினம், தெய்வதிருமகள், தலைவா உள்பட பல படங்களை இயக்கிய விஜய், ‘தலைவி’ படத்தை டைரக்டு செய்து இருக்கிறார்.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகளும் முடிவடைந்தன. படம் திரைக்கு வர தயாராக உள்ளது.

புதிய (தி.மு.க.) அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ‘தலைவி’ படத்தில் கருணாநிதியின் கதாபாத்திரம் எவ்வாறு அமைந்துள்ளது? படம் எப்போது திரைக்கு வரும்? என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கு படக்குழுவினர் பதில் அளித்துள்ளனர்.

‘‘தலைவி படத்தில் கலைஞரின் கதாபாத்திரம் நேர்மையாகவே அமைக்கப்பட்டு இருக்கிறது. எதிர்மறையாக இல்லை. படம், கடந்த மாதமே திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு சட்டம் வாபஸ் ஆனதும் ‘தலைவி’ படம் வெளியிடப்படும்’’ என்று படக்குழுவினர் கூறினார்கள்.

Next Story