சினிமா செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு டைரக்டர் கே.பாக்யராஜ் வாழ்த்து + "||" + To MK Stalin Congratulations to Director K. Bhagyaraj

மு.க.ஸ்டாலினுக்கு டைரக்டர் கே.பாக்யராஜ் வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்கு டைரக்டர் கே.பாக்யராஜ் வாழ்த்து
முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு திரைப்பட இயக்குனர் கே.பாக்யராஜ் வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
பொறுத்தார் பூமி ஆள்வார். ஆனாலும், பொறுப்பு தங்களை தேடி வர அப்பாவின் ஆசி கனிந்துள்ளது. அதைவிட தங்களது தன்னம்பிக்கையும், தளராத உழைப்புமே மிக மிக உன்னதம் என என் மனம் நெகிழ்கிறது. தேர்தல் முடிவு வந்ததுமே, உங்களை சந்தித்து வாழ்த்த நினைத்தேன்.

ஆனால் எனக்கு இருந்த நோயின் அறிகுறி காரணமாக சந்திப்பை தவிர்த்தேன். இப்போது தொற்று உறுதியானதால், காலதாமதமின்றி கடிதம் மூலமாக வாழ்த்துகிறேன். நிறைவான ஆட்சி அரங்கேறி, நாடு நலம் பெற அப்பாவின் அருள் உடனிருக்கும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கே.பாக்யராஜ் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலினுக்கு, தபாலில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து: அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான அரசாணை: மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.