நடிகர் சங்கத்துக்கு உதவுவதாக மு.க.ஸ்டாலின் உறுதி விஷால் பேட்டி


நடிகர் சங்கத்துக்கு உதவுவதாக மு.க.ஸ்டாலின் உறுதி விஷால் பேட்டி
x
தினத்தந்தி 9 May 2021 12:00 AM GMT (Updated: 2021-05-09T01:18:16+05:30)

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

‘‘முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து சொன்னேன். அத்துடன் நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமையையும் எடுத்து கூறினேன். இதனால் எத்தனை கலைஞர்கள் ‘பென்சன்’ கிடைக்காமல், மருந்து வாங்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் விளக்கினேன்.

‘‘இன்றைய சூழலில் கொரோனாவில் இருந்து முதலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்துக்கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபின், நடிகர் சங்கத்துக்கு உதவுகிறேன்’’ என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்தார்.

முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்த்து கூறினேன்.’’ இவ்வாறு விஷால் கூறினார்.

Next Story