சினிமா செய்திகள்

கொரோனாவுக்கு டைரக்டர் பலி + "||" + To the corona Director kills

கொரோனாவுக்கு டைரக்டர் பலி

கொரோனாவுக்கு டைரக்டர் பலி
கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தயாளன். முத்து, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
முரளி, தேவயானி, வடிவேல் நடித்த கண்ணுக்கு கண்ணாக படத்தின் மூலம் இயக்குனரானார். தயாளனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி தயாளன் மரணம் அடைந்தார். ஏற்கனவே இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, நடிகர் பாண்டு ஆகியோர் கொரோனா தொற்றில் சிக்கி மரணம் அடைந்தனர். கொரோனாவுக்கு திரையுலகினர் அடுத்தடுத்து பலியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.