நடிகர்-ஒளிப்பதிவாளர் அருண்மொழிவர்மன் திடீர் மரணம்


நடிகர்-ஒளிப்பதிவாளர் அருண்மொழிவர்மன் திடீர் மரணம்
x
தினத்தந்தி 9 May 2021 9:14 PM GMT (Updated: 2021-05-10T02:44:45+05:30)

மறைந்த பழம் பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகன் அருண்மொழி வர்மன். இவர் பிரபல நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி ஆகியோரின் சகோதரர் ஆவார்.

அருண் மொழி வர்மன் தமிழில் சிமிழ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். தெலுங்கில் ஶ்ரீஹரி நடித்த பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண்மொழி வர்மனுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து தியாகராய நகரில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் அருண்மொழி வர்மன் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. மரணம் அடைந்த அருண்மொழி வர்மனுக்கு ஷர்லி என்ற மனைவியும் அப்ரினா, மகாலட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். அருண்மொழி வர்மன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


Next Story