விஜய்க்கு வில்லனாக ஜான் ஆபிரகாம்?


விஜய்க்கு வில்லனாக ஜான் ஆபிரகாம்?
x
தினத்தந்தி 9 May 2021 9:36 PM GMT (Updated: 2021-05-10T03:06:08+05:30)

மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 65-வது படம். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. அடுத்து கட்ட படப்பிடிப்பை சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். வணிக வளாகம் ஒன்றில் முக்கிய காட்சிகளை படமாக்கவும் முடிவு செய்து இருந்தனர். ஆனால் கொரோனா 2-வது அலை காரணமாக அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளதால் படப்பிடிப்பு முடங்கி உள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்துள்ளனர். யோகிபாபு, அபர்ணா தாஸ், வி.டி.வி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜான் ஆபிரகாம் இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். ஏற்கனவே இந்தி கதாநாயகர்கள் அக்‌ஷயகுமார் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 படத்திலும், விவேக் ஓபராய் விவேகம் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தனர்.

Next Story