சினிமா செய்திகள்

கொரோனா பற்றிய கங்கனா ரனாவத்தின் பதிவை நீக்கியது இன்ஸ்டகிராம் + "||" + Kangana Ranaut's Post Calling COVID "Small Time Flu" Deleted By Instagram

கொரோனா பற்றிய கங்கனா ரனாவத்தின் பதிவை நீக்கியது இன்ஸ்டகிராம்

கொரோனா பற்றிய கங்கனா ரனாவத்தின் பதிவை நீக்கியது இன்ஸ்டகிராம்
கொரோனா சிறிய காய்ச்சல் மட்டுமே எனக்கூறிய கங்கனா ரனாவத்தின் பதிவை இன்ஸ்டகிராம் நீக்கியுள்ளது.
மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதோடு, கொரோனா சிறிய காய்ச்சல் தவிர வேறு ஒன்றும் இல்லை எனவும் கங்கனா ரனாவத் கூறியிருந்தார். 

கங்கனா ரனாவத் தனது பதிவில்,” "மக்களே, எதற்கும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தியை அனுமதிக்காதீர். நீங்கள் பயந்தால் அது உங்களை இன்னும் பயமுறுத்தும். வாருங்கள் இந்த கோவிட்-19 கிருமியை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சத்தால் மக்களைப் பயமுறுத்திவருகிறது” என பதிவிட்டு இருந்தார். 

இந்த நிலையில், கங்கனா ரனாவத்தின் பதிவை இன்ஸ்டகிராம் நீக்கியுள்ளது. இன்ஸ்டகிராம் ஸ்டோரி பக்கத்தில் இந்த தகவலை கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார். கொரோனாவை நான் அழித்துவிடுவேன் என பதிவில் குறிப்பிட்டு இருந்ததாகவும் இதனால் சிலர் காயம் அடைந்து இருப்பதாகவும் கங்கனா ரனாவத் தனது பதிவில் விமர்சனம் செய்து இருக்கிறார். 


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24.11 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24.11 கோடியை தாண்டியுள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23.45- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 23.45 கோடியாக உயர்ந்துள்ளது.
3. வீட்டிலிருந்து பணிபுரியும் வசதி அடுத்தாண்டு வரை நீட்டிப்பு: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
கொரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை குகூள் அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது.
4. தென்கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
5. பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுப்பு
யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. எனவே, பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.