சினிமா செய்திகள்

நடிகர் சல்மான் கான் சகோதரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Actor Salman Khan confirms corona impact to sisters

நடிகர் சல்மான் கான் சகோதரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நடிகர் சல்மான் கான் சகோதரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நடிகர் சல்மான் கானின் இரண்டு சகோதரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புனே,

நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ராதே யுவர் மோஸ்ட் வான்டட் பாய்.  இந்த படம் பற்றிய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் இன்று கலந்து கொண்டார்.

அவர் பேசும்பொழுது, தனது இரு சகோதரிகளான அர்பிதா கான் சர்மா மற்றும் அல்வைரா கான் அக்னிஹோத்ரி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  ஆனால் அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

சமீபத்தில் ராதே திரைப்பட தயாரிப்பாளர்களான சல்மான் கான் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் அரசு சாரா அமைப்பு ஒன்றுடன் இணைந்து உறுதிமொழி ஒன்று அளித்தனர்.  தங்களுடைய வருவாயில் ஒரு பங்கு கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என தெரிவித்தனர்.

நடிகர் சல்மான் கான், மராட்டியத்தின் மும்பை நகரில் 5 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு தொற்று காலத்தில் உதவிடும் நோக்கில், கடந்த ஏப்ரல் இறுதியில் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதேபோன்று, கொரோனா பாதிப்புகளால் தொடர்ந்து வேலையின்றி உள்ள இந்தி திரையுலகை சேர்ந்த 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்து அவர்களுக்கு உதவவும் முடிவு செய்து உள்ளார்.

இதன்படி, தினக்கூலி அடிப்படையில் சம்பளம் பெறும் 25 ஆயிரம் தொழிலாளர்களின் கணக்குகளில் தலா ரூ.1,500 செலுத்த இருக்கிறார்.  இதன்படி திரை தொழிலாளர்கள் கூட்டமைப்பில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் இந்த நிதியுதவியை பெற முடியும்.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தன
கேரளாவில் கொரோனா பாதிப்பு விகிதம் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளன.
2. கொரோனா பிரச்சினைக்கு ஊரடங்கு என்பது இறுதி தீர்வல்ல-சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
3. தினசரி கொரோனா பாதிப்பு 85 சதவிகிதம் குறைந்துள்ளது- மத்திய சுகாதாரத்துறை
நாட்டில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தோடு ஒப்பிடும் போது தற்போது 85 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
4. இங்கிலாந்தில் மேலும் 4 வாரங்களுக்கு பிறகே ஊரடங்கில் தளர்வுகள்: போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது
5. ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மர் நாட்டில் 1,45,603 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.