சினிமா செய்திகள்

வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி + "||" + In a weird look Keerthi Suresh, Sai Pallavi

வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி

வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி
கீர்த்தி சுரேஷ், சாய்பல்லவி ஆகிய இருவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார்கள்.
தற்போது அவர்கள் நடிக்கும் புதிய படங்களின் தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். நானியுடன் சாய்பல்லவி, ஷியாம் சின்கா ராய் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கையில் கொழுந்து விட்டு எரியும் சூலத்துடன் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அது வைரலாகிறது.

மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் நயன்தாரா சூலம் ஏந்தி நடித்த கதாபாத்திரத்தின் சாயலில் சாய்பல்லவியின் தோற்றம் இருப்பதாக ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளார். கடற்படை வைத்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேசின் தோற்றம் வெளியாகி உள்ளது. அதில் கீர்த்தி சுரேஷ் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்கள் அணிந்து இருக்கிறார். புகைப்படத்தில் அவர் ராணிபோல் இருப்பதாக ரசிகர்கள் வலைத்தளத்தில் பாராட்டி உள்ளனர். இந்த புகைப்படமும் வலைத்தளத்தில் வைரலாகிறது.