சினிமா செய்திகள்

மெர்சல் பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி + "||" + Mersel Filmmaker admitted to hospital

மெர்சல் பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி

மெர்சல் பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விஜய் நடித்த மெர்சல் பட தயாரிப்பாளர் முரளி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெர்சல்.  தேனாண்டாள் நிறுவனம் சார்பில் தயாரான இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்த முரளி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ராமநாராயணனின் மகனான இவர், தேனாண்டாள் நிறுவனத்தின் சார்பில் தற்போது படங்களை தயாரித்து வருகிறார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள தேனாண்டாள் முரளி, பல வருடங்களுக்கு பின்னர் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் படத்தின் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இந்நிலையில், உடல்நல குறைவால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. குடியரசு தின விழா; 24 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி
டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 24 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
2. கால் ஒடிந்து உயிருக்கு போராடிய குதிரை
கால் ஒடிந்து உயிருக்கு போராடிய குதிரைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை
3. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
4. மராட்டியத்தில் நஞ்சான உணவை சாப்பிட்ட 31 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
மராட்டியத்தின் புனே நகரில் உள்ள பயிற்சி மைய மாணவிகள் 31 பேர் நஞ்சான உணவை சாப்பிட்டதில் உடல்நல பாதிப்பு அடைந்து உள்ளனர்.
5. தமிழக செய்தி துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.