குடும்ப புகைப்படம் வெளியிட்ட நடிகை குஷ்புவை வாழ்த்திய ரசிகர்கள்


குடும்ப புகைப்படம் வெளியிட்ட நடிகை குஷ்புவை வாழ்த்திய ரசிகர்கள்
x
தினத்தந்தி 12 May 2021 12:10 AM GMT (Updated: 2021-05-12T05:40:05+05:30)

நடிகை குஷ்பு தனது குடும்ப புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷ்புவுக்கு வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். குஷ்பு

நடிகை குஷ்பு சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றி என்பது தோல்வியோடுதான் தொடங்குகிறது. மக்கள் தீர்ப்பை அடக்கத்தோடு ஏற்கிறேன். தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன். தமிழ்நாட்டை மேலும் சிறப்பானதாக ஆக்க புதிய அரசுக்கு உதவியாக இருப்போம். மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முன்னேற்ற பாதைக்கு செல்லும் என்று நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

குஷ்புவின் கணவர் சுந்தர்.சி.க்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இந்த நிலையில் சுந்தர்.சி, மூத்த மகள் அவந்திகா, இளைய மகள் அனந்திதா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டு உள்ளார்.

அந்த புகைப்படத்துடன் எனது உலகம் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷ்புவுக்கு வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். குஷ்பு தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

Next Story