சினிமா செய்திகள்

மீண்டும் படப்பிடிப்பில் தீவிரமாகும் கமல் + "||" + Kamal intensifies shooting again

மீண்டும் படப்பிடிப்பில் தீவிரமாகும் கமல்

மீண்டும் படப்பிடிப்பில் தீவிரமாகும் கமல்
கமல்ஹாசன் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட தயாராகி உள்ளார்.
கமல்ஹாசன் தேர்தலால் புதிய படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்து இருந்தார். தற்போது மீண்டும் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட தயாராகி உள்ளார். அவர் கைவசம் இந்தியன் 2, விக்ரம் ஆகிய 2 படங்கள் உள்ளன.

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தினால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு படத்தையும், இந்தியில் அந்நியன் பட ரீமேக்கையும் இயக்க போகிறார்.

இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை கேட்டு பட நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் இந்த பிரச்சினையில் தலையிட்டு ஷங்கரையும், தயாரிப்பாளரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் படத்தின் கதையில் சிறிய மாற்றம் செய்யும்படி கமல்ஹாசன் அறிவுறுத்தி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. அந்த பணியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விக்ரம் படத்திலும் கமல் நடிக்க இருக்கிறார். இரு படங்களிலும் மாறி மாறி நடிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.