சினிமா செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த் + "||" + Actor Rajinikanth got corona vaccination today

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது இல்லத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சென்னை,

கடந்த ஒருமாத காலமாக ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்றைய தினம் சென்னை திரும்பினார். ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்து விட்டு நேற்று தனி விமானம் மூலம் அவர் சென்னை வந்திறங்கினார்.

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் சில நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இதனை அவரது மகள் சவுந்தரியா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாம் ஒன்றாக இணைந்து இந்த கொரோனா தொற்றை வென்றெடுக்க வேண்டும் குறிப்பிட்டு ரஜினிகாந்த் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தினை அவர் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வரும் 23 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
50 ஆயிரம் முகாம்களில் சனிக்கிழமை 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
2. இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 97 கோடி
இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 97 கோடியை தொட்டுள்ளது.
3. அமெரிக்காவில் இதுவரை 40.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 85 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. மாநிலங்களிடம் 8.43 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு
மாநிலங்களின் கையிருப்பில் 8.43 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. அமெரிக்காவில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 18.7 கோடிக்கும் அதிகமானோர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.