சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படம் மீண்டும் எடை கூடிய அனுஷ்கா + "||" + Viral photo Anushka with weight again

வைரலாகும் புகைப்படம் மீண்டும் எடை கூடிய அனுஷ்கா

வைரலாகும் புகைப்படம் மீண்டும் எடை கூடிய அனுஷ்கா
தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் கதாபாத்திரத்துக்காக எடை கூடி தோற்றத்தையே மாற்றினார். அந்த படத்துக்கு பிறகு அவரால் எடையை குறைக்க முடியவில்லை.
தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் கதாபாத்திரத்துக்காக எடை கூடி தோற்றத்தையே மாற்றினார். அந்த படத்துக்கு பிறகு அவரால் எடையை குறைக்க முடியவில்லை.

உடற்பயிற்சிகள், யோகா, உணவு கட்டுபாடுகள் என்று பல முயற்சிகள் செய்தும் எடை குறையவில்லை. இதனால் பாகுபலி 2-ம் பாகம் படத்தில் கிராபிக்ஸ் மூலம் அனுஷ்கா உடம்பை ஒல்லியாக காட்டினார்கள். எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன. பின்னர் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்தார்.

அதன்பிறகு தமிழ், தெலுங்கில் வெளியான நிசப்தம் படத்தில் மாதவனுடன் நடித்து இருந்தார். இந்த நிலையில் அனுஷ்காவுக்கு மீண்டும் எடைகூடி உள்ளது. குண்டான தோற்றத்தில் இருக்கும் அவரது புதிய புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் வீட்டிலேயே இருந்ததால் எடை போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனுஷ்காவுக்கு தற்போது 39 வயது ஆகிறது. துபாய் தொழில் அதிபருடன் அவருக்கு திருமணம் முடிவாகி உள்ளதாகவும் அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் குறைந்தவர் என்றும் தகவல் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வொண்டர் வுமன் ஸ்டைலில் யாஷிகா ஆனந்த்... வைரலாகும் புகைப்படம்
சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் திரும்பியுள்ள நிலையில் யாஷிகா ஆனந்த் புதிய போட்டோ ஷூட் ஒன்றை அளித்துள்ளார்.
2. வெங்கட் பிரபுவின் மன்மதலீலை - வெளியான புகைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பட்டியலில் இருக்கும் வெங்கட் பிரவின் மன்மதலீலை புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
3. மகான் படத்தின் ரிலீஸ்.. கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட புகைப்படம்
விக்ரமும் துருவும் இணைந்து நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் ‘மகான்’ படம் குறித்து இயக்குனரின் பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
4. பிகினி உடையில் வலம் வரும் கிரண்... வைரலாகும் வீடியோ
ஜெமினி, வின்னர், வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
5. கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி... வைரலாகும் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள காயத்ரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.