சினிமா செய்திகள்

இந்தியில் சாய் பல்லவி + "||" + Sai Pallavi in Hindi

இந்தியில் சாய் பல்லவி

இந்தியில் சாய் பல்லவி
மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாய்பல்லவிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி 2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படங்களில் நடித்தார்.
மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாய்பல்லவிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி 2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படங்களில் நடித்தார்.

தெலுங்கில் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, ராணாவுடன் விராட பருவம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. நானியுடன் ஷியாம் சிங்க ராய் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஓ.டி.டி.யில் வெளியான பாவக்கதைகள் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்.

அடுத்து இந்தி படத்தில் நடிக்க சாய்பல்லவிக்கு வாய்ப்பு வந்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும் ஸ்ரேயா கதாநாயகியாகவும் நடித்து 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்ற படம் சத்ரபதி. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் பெல்ல கொண்ட ஸ்ரீநிவாஸ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நடிக்க சாய்பல்லவியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சாய்பல்லவி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர் இந்திக்கு போகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதியின் 96 படம் இந்தியில் ரீமேக்
தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து 2018-ல் வெளியான படம் 96. இந்த படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.
2. இந்தியில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதியின் ‘96’
தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 96 திரைப்படம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3. சமந்தா படம் இந்தியில் ரீமேக்
சமந்தா படம் இந்தியில் ரீமேக்.
4. இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா?
இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா?
5. மீண்டும் தனுசுக்கு ஜோடி சாய் பல்லவி
தனுசுக்கு இந்தியில் அந்த்ராங்கி ரே, ஹாலிவுட் படமான தி கிரே மேன் ஆகியவை கைவசம் உள்ளன.