நடிகர் சென்ட்ராயனுக்கு கொரோனா


நடிகர் சென்ட்ராயனுக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 May 2021 6:08 AM GMT (Updated: 2021-05-14T11:38:58+05:30)

கொரோனா தொற்றில் நடிகர் நடிகைகள் தொடர்ந்து சிக்கி வருகிறார்கள். தற்போது பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் சென்ட்ராயனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றில் நடிகர் நடிகைகள் தொடர்ந்து சிக்கி வருகிறார்கள். தற்போது பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் சென்ட்ராயனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

தனுசின் பொல்லாதவன் படத்தில் நடித்த சென்ட்ராயன் தொடர்ந்து ஆடுகளம், ரவுத்திரம், ரம்மி, மூடர் கூடம், மெட்ரோ, நிமிர், அசுரன், நாயகி, சுல்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். சென்ட்ராயன் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’வாழ்க்கையில் ஜெயிக்கணும் சினிமாவில் ஜெயிக்கணும் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எல்லா விஷயங்களையும் நேர்மறையாகத்தான் நான் பார்ப்பேன். எனக்கே கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டது. ஆரம்பத்தில் கொரோனாவை பொருட்படுத்தாமல் கவனக்குறைவாகவே இருந்தேன். எனக்கே வந்து இப்போது தாக்க ஆரம்பித்துவிட்டது. எனவே மக்களே நீங்கள் கவனமாக இருங்கள். நான் இப்போது எனது வீட்டில் எனது அறையில் தனியாக இருக்கிறேன். எனது மனைவியும் குழந்தையும் இன்னொரு அறையில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். கொரோனா நாம் நினைப்பது மாதிரி இல்லை. ஆபத்தானது'' என்று கூறியுள்ளார்.

Next Story