சினிமா செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட ரஜினிகாந்த் + "||" + Rajinikanth vaccinated against corona

கொரோனா தடுப்பூசி போட்ட ரஜினிகாந்த்

கொரோனா தடுப்பூசி போட்ட ரஜினிகாந்த்
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகின்றனர். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு புறம் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் விறுவிறுப்பாக நடக்கிறது.

நடிகர்-நடிகைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு மாதமாக ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பிய ரஜினிகாந்தும் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ரஜினிக்கு தடுப்பூசி போடும் புகைப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு “நமது தலைவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றிணைந்து வெல்வோம். அனைவரும் முககவசம் அணியுங்கள். வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்'' என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். ரஜினி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி- புதிதாக 89 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
2. புதிதாக 24 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 24 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
3. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
4. 4 பேருக்கு கொரோனா உறுதி
4 பேருக்கு கொரோனா உறுதி
5. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.