‘அண்ணாத்த’ படத்தை அடுத்து தனுஷ் இயக்கத்தில், ரஜினிகாந்த்


‘அண்ணாத்த’ படத்தை அடுத்து தனுஷ் இயக்கத்தில், ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 14 May 2021 12:08 PM GMT (Updated: 2021-05-14T17:38:34+05:30)

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தபோது, அவருடைய உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது.

அதற்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றபின், சென்னை திரும்பினார்.சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு அவர் உடல்நிலை தேறியது.‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடித்தார். 90 சதவீத படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்தது. மீதமுள்ள காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த படம் திரைக்கு வந்த பின், தனுஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். அந்த படத்துடன் அவர் திரையுலகில் இருந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் என்று பேசப்படுகிறது.

Next Story