சினிமா செய்திகள்

படப்பிடிப்பு எப்போது? விஜய் படத்துக்காக பல கோடி செலவில் போடப்பட்ட அரங்கு + "||" + When is the shooting? The multi-crore stage set for the Vijay film

படப்பிடிப்பு எப்போது? விஜய் படத்துக்காக பல கோடி செலவில் போடப்பட்ட அரங்கு

படப்பிடிப்பு எப்போது? விஜய் படத்துக்காக பல கோடி செலவில் போடப்பட்ட அரங்கு
விஜய் இப்போது தனது 65-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடை பெற்றது. அதில் விஜய் 10 நாட்கள் கலந்து கொண்டு நடித்தார்.
படத்தின் முக்கிய காட்சிகளும், விஜய் நடித்த மிக பயங்கரமான ஒரு சண்டை காட்சியும் ஜார்ஜியாவில் படமானது. கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு குழுவினர் அவசரம் அவசரமாக அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினர்.இதையடுத்து சென்னை அருகில் உள்ள பூந்தமல்லியில், பல கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமான ஒரு அரங்கு அமைக்கப்பட்டது. அதில் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது 
தொடங்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இது ஒரு குடும்ப காதல் கதை. விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் டைரக்டு செய்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாயகனாக 29 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்..!
'29 ஆண்டுகளான விஜய்யிசம்' - சிறப்பு வீடியோக்கள், புகைப்படங்கள் என சமூக வலைதளங்களில் விஜய் குறித்த பதிவுகளை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
2. ‘பீஸ்ட்' படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஜய்?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும பீஸ்ட் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
3. மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய்
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4. பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய்
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் 67-வது படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
5. ஏ.வெங்கடேஷ் இயக்கிய ‘ரஜினி’ படப்பிடிப்பு முடிவடைந்தது
‘மகாபிரபு’, ‘சாக்லெட்,’ ‘ஏய்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ஏ.வெங்கடேஷ், தனது புதிய படத்துக்கு ‘ரஜினி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.