கொரோனாவுக்கு டைரக்டர் பலி


கொரோனாவுக்கு டைரக்டர் பலி
x
தினத்தந்தி 14 May 2021 6:53 PM GMT (Updated: 2021-05-15T00:23:26+05:30)

கொரோனா 2-வது அலைக்கு நடிகர்கள், இயக்குனர்கள் பலியாகி வருகிறார்கள். தற்போது பிரபல தெலுங்கு டைரக்டர் நந்தியாலா ரவி கொரோனா தொற்றினால் மரணம் அடைந்துள்ளார்.

இவர் லட்சுமி ராவே மா இண்டிகி உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார். ஒரே புஜ்ஜிகா, பவர் பிளே போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். நந்தியாலா ரவிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

சமீபத்தில் கொரோனாவுக்கு நடிகர்கள் பாண்டு, மாறன், ஜோக்கர் துளசி, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, தயாளன், மலையாள நடிகர் மாதம்பு குனுசுட்டன், பாடகர் கோமகன், தயாரிப்பாளர் பாபுராஜ், தெலுங்கு நடிகர் தும்மல் நரசிம்மராவ், இந்தி நடிகர் ராகுல்வோரா ஆகியோர் மரணம் அடைந்தனர்.Next Story