சினிமா செய்திகள்

முதல்- அமைச்சர் நிவாரண நிதி: சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் வழங்கினார் + "||" + First - Minister Relief Fund: Sivakarthikeyan provided Rs 25 lakh

முதல்- அமைச்சர் நிவாரண நிதி: சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் வழங்கினார்

முதல்- அமைச்சர் நிவாரண நிதி: சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் வழங்கினார்
நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 25 லட்சம் வழங்கி இருக்கிறார்.
சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள்.  நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் 25 லட்சம் ரூபாய் வழங்கினார்.  தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 25 லட்சம் வழங்கி இருக்கிறார்.