சினிமா செய்திகள்

‘‘சினிமா தியேட்டர்களுக்கு ஓ.டி.டி. போட்டியா?’’ அபிராமி ராமநாதன் பேட்டி + "||" + For cinema theaters OTT Competition Interview with Abirami Ramanathan

‘‘சினிமா தியேட்டர்களுக்கு ஓ.டி.டி. போட்டியா?’’ அபிராமி ராமநாதன் பேட்டி

‘‘சினிமா தியேட்டர்களுக்கு ஓ.டி.டி. போட்டியா?’’ அபிராமி ராமநாதன் பேட்டி
‘‘சினிமா தியேட்டர்களுக்கு ஓ.டி.டி. தளங்கள் போட்டி இல்லை’’ என்று தியேட்டர் அதிபர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது.
‘‘பெரிய பட்ஜெட்டில் தயாரான படங்களே ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன. மேலும் சில பெரிய பட்ஜெட் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட உள்ளன. இப்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத சூழ்நிலை இருந்து வருகிறது. பொருளாதார நஷ்டத்தை தவிர்ப்பதற்காக, குறைந்த லாபம் கிடைத்தால் கூட போதும் என்று பட அதிபர்கள் தங்களின் படங்களை ஓ.டி.டி.க்கு கொடுக்கிறார்கள். டி.வி. எப்படி தியேட்டர்களுக்கு போட்டி இல்லையோ, அப்படித்தான் ஓ.டி.டி.யும் தியேட்டர்களுக்கு போட்டி இல்லை. இப்போதைய சூழ்நிலையில், தியேட்டர்களில் படங்களை திரையிட முடியவில்லை. ஓ.டி.டி.யால் முடிகிறது. அவ்வளவுதான்.’’ இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.