சினிமா செய்திகள்

ஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் நடிகைகள் + "||" + Hate marriage Actresses

ஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் நடிகைகள்

ஆணாதிக்கத்தை விரும்பாமல் திருமணத்தை வெறுக்கும் நடிகைகள்
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் பல கதாநாயகிகள், திருமண வாழ்க்கையை வெறுக்கிறார்கள்.
ஒரு ஆணின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. பிரபல கதாநாயகிகள் மீது மோகம் வளர்த்து ஆசை ஆசையாக அவர்களை திருமணம் செய்து கொள்ளும் பெரும் தொழில் அதிபர்கள், அந்த மோகம் தீர்ந்ததும் சலிப்பு அடைந்து விடுகிறார்கள். அவசரப்பட்டு விட்டோமோ என்று தவறு செய்தவர்கள் போல் உணர்கிறார்கள்.

இதேபோல் அந்த நடிகைகளும் தவறு செய்தவர்கள் போல் வருத்தப்படுகிறார்கள். இந்த உணர்வுகளும், வருத்தங்களும் நாளடைவில் வெறுப்பாக மாறுகின்றன. போகப்போக வெறுப்பு முற்றி தகராறில் முடிகிறது. காதல் கசந்து போய் வேதனையுடனும், விரக்தியுடனும் பிரிந்து விடுகிறார்கள்.

திருமணத்தை வெறுக்கும் நம்மூர் நாயகிகள் வருமாறு:-

1. திரிஷா. சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு தொழில் அதிபருடன் காதல் ஏற்பட்டு அது நிச்சயதார்த்தம் வரை சென்றது. கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்று போனது. அதன் பிறகு திருமணம் என்றாலே திரிஷா வெறுக்க ஆரம்பித்தார்.

2. அனுஷ்கா. இவர், மார்க்கெட் இழந்ததால் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இவருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி மாப்பிள்ளை அமையாததால், திருமணம் என்றாலே கற்றாலையை கடித்தது போல் கசப்பு அடைகிறார்.

3. தமன்னா. ‘‘அறிமுகமே இல்லாத ஆணுடன் திருமண ஒப்பந்தம் செய்து கொள்வதை நான் விரும்பவில்லை. அதற்காக யாரையும் நான் காதலிக்கவும் இல்லை. திருமணத்துக்கு என்ன அவசரம்?’’ என்று கேட்கிறார், தமன்னா.

4. திருமண வாழ்க்கையை வெறுக்கும் இன்னொரு நடிகை, சார்மி. தமிழ் பட உலகில் மார்க்கெட் இழந்த இவர், இப்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.