சினிமா செய்திகள்

இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழந்தார் + "||" + Director and actor Arunraja Kamaraj's wife Corona was killed

இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழந்தார்

இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழந்தார்
கொரோனா பாதிப்பு காரணமாக இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி இன்று காலமானார்
சென்னை, 

பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் 2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ உள்ளிட்ட படங்களின் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.

நடிப்பு தவிர்த்து ‘தெறி’, ‘காக்கிச் சட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் பல்வேறு பாடல்களையும் அருண்ராஜா பாடியுள்ளார்.

பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் மையப்படுத்தி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஆர்ட்டிகிள் 15 என்ற பாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார். 

இந்நிலையில் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு உயிரிழந்தார். சிந்துஜாவின் மறைவு, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 200 படங்களை தாண்டிய வில்லன் நடிகர்!
துணை வில்லனாக இருந்து முக்கிய வில்லனாக உயர்ந்த சம்பத்ராம், முதன்முதலாக நடித்த படம், ‘முதல்வன்’. சமீபத்தில் திரைக்கு வந்த ‘காடன்’ இவருடைய 201-வது படம்.