சினிமா செய்திகள்

கமலுடன் நடிக்கும் விஜய் சேதுபதி + "||" + Starring with Kamal Vijay Sethupathi

கமலுடன் நடிக்கும் விஜய் சேதுபதி

கமலுடன் நடிக்கும் விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி இமேஜ் பார்க்காமல் மற்ற கதாநாயகர்கள் படங்களில் வில்லனாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து பேசப்பட்டார். அவருக்கு தெலுங்கு, இந்தி, மலையாள படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வருகின்றன.

தேவர் மகன் இரண்டாம் பாகமாக தயாராகும் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பட வேலைகள் தொடங்கப்படவில்லை.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியிடம் பேசி வந்தனர். இதுகுறித்து விஜய்சேதுபதி கூறும்போது, “விக்ரம் படக்குழு என்னை அணுகியது உண்மைதான். அது வில்லன் கதாபாத்திரம். ஆனால் தேதிகள் ஒதுக்கப்படவில்லை. விக்ரம் படத்தில் ஏதேனும் சிறப்பான விஷயங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதை செய்வதில் அர்த்தம் இல்லை” என்றார்.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.