சினிமா செய்திகள்

இந்தி, ஆங்கிலத்தில் ‘ஒத்த செருப்பு' ரீமேக் + "||" + In Hindi and English Oththa seruppu remake

இந்தி, ஆங்கிலத்தில் ‘ஒத்த செருப்பு' ரீமேக்

இந்தி, ஆங்கிலத்தில் ‘ஒத்த செருப்பு' ரீமேக்
‘ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் புதுமைகள் திரையுலகை திரும்பி பார்க்க வைத்து பாராட்டுகளை குவித்தது.
பார்த்திபன் இயக்கத்தில் 2019-ல் வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் புதுமைகள் திரையுலகை திரும்பி பார்க்க வைத்து பாராட்டுகளை குவித்தது. படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இருந்தார். ஒத்த செருப்பு படம் தேசிய விருதையும் பெற்றது.

2020-ல் டோரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய மூன்று விருதுகளை வென்றது. ஆஸ்காருக்கும் சென்று வந்தது.

இந்த நிலையில் ஒத்த செருப்பு படத்தை இந்தி, ஆங்கில மொழிகளில் ரீமேக் செய்ய பார்த்திபன் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இதுகுறித்து பார்த்திபன் கூறும்போது, “ஒத்தசெருப்பு படத்தை, இந்தி ஆங்கிலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளேன். இந்தி பதிப்பில் நடிக்க அபிஷேக்பச்சனிடம் பேசப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் ட்ரூ லை படத்தை எடுத்த பிரபல பட நிறுவனத்துடன் பேசி வருகிறோம்.

படப்பிடிப்புக்கு சிறிய குழுவினர் போதும் என்பதால் ஆகஸ்டில் படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருக்கிறோம். இந்தி, ஆங்கில பட வேலைகளுக்காக அந்தந்த மொழி தெரிந்த உதவியாளரை தேர்வு செய்து வருகிறேன்'' என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது - கமல்ஹாசன் டுவீட்
இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
2. எதிர்ப்பு காரணமாக அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை கைவிட முடிவு?
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் வெளியான அந்நியன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
3. 4 இந்தி படங்களில் ரகுல் பிரீத் சிங்
தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானவர் ரகுல்பிரீத் சிங்.