சினிமா செய்திகள்

இந்தியில் தயாராகும் அஜித்குமாரின் ‘வீரம்' + "||" + Ready in Hindi Ajithkumar Veeram

இந்தியில் தயாராகும் அஜித்குமாரின் ‘வீரம்'

இந்தியில் தயாராகும் அஜித்குமாரின் ‘வீரம்'
சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து 2014-ல் திரைக்கு வந்த வீரம் படம் பெரிய வெற்றி பெற்றது.
இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க கட்டமறயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து வீரம் படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. இந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று அவர் விலகி விட்டார். தற்போது அவருக்கு பதிலாக சல்மான்கான் நடிக்க வீரம் ரீமேக் பட வேலைகள் தொடங்கி உள்ளன.

இந்த படத்துக்கு பை ஈத் கபி தீவாளி என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இதில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே தேர்வாகி உள்ளார்.

அவர் கூறும்போது சல்மான்கானுடன் சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். கொரோனா அடங்கியதும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்றார். பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தில் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.