சினிமா செய்திகள்

நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Actress Samyukta Hegde confirmed for corona infection

நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி

நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி
‘கோமாளி’ திரைப்பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மிக மோசமான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி தற்போது கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த மாதம் தனது பெற்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் தற்போது குணமடைந்து வரும் நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சம்யுக்தா தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சம்யுக்தா ஹெக்டே தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் இன்று 1,139 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 15,383 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. கேரளாவில் இன்று 19,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 1,73,631 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. புதுச்சேரியில் புதிதாக 79 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
4. சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
5. கேரளாவில் இன்று 19,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 1,80,842 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.