சினிமா செய்திகள்

சினிமாவில் நடித்தது நிஜத்தில் நடக்கிறது: நடிகர் வடிவேல் + "||" + Starring in cinema is actually happening - Actor Vadivelu

சினிமாவில் நடித்தது நிஜத்தில் நடக்கிறது: நடிகர் வடிவேல்

சினிமாவில் நடித்தது நிஜத்தில் நடக்கிறது: நடிகர் வடிவேல்
நகைச்சுவை நடிகர் வடிவேல் கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோவில் பேசி இருப்பதாவது:-
‘'கொரோனாவால் பீதி ஏற்பட்டு உள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாது என்கின்றனர். மருத்துவ உலகத்தையும் மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை.என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் ஆள் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கும் யாரும் இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாக போய் நடிப்பது.இறைவன் கொரோனா என்ற ஒரு படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறான். கொரோனா படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை. அதை தூக்கினால்தான் எல்லோரும் வெளியே வர முடியும்.

ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால் விட்டு நடித்து இருந்தேன். அதை வெறும் படமாகத்தான் செய்தேன். ஆனால் உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று உணர வைத்து இருக்கிறான் இறைவன்.பயம் வேண்டாம். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம்''

இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. படிப்பும், நடிப்பும் இரு கண்கள் - ஷார்மிஷா
நான் நன்றாகப் பாடுவேன், நடனம் ஆடுவேன், ஓவியம் வரைவேன். விளையாட்டுத் துறையிலும் ஈடுபட்டு வருகிறேன்.
2. வெளிநாட்டில் அசத்தி வரும் தமிழ் பெண்
மாடலாக இருக்க வேண்டும் என்றால், சரும ஆரோக்கியம் முக்கியமானது. சரும வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே தினமும் வைட்டமின் டி கிடைப்பதற்காக சூரிய குளியல் எடுப்பேன்.
3. சினிமாவில் நுழைந்து 19 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து திரிஷா நெகிழ்ச்சி பதிவு...!
தென்னிந்திய சினிமாவின் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக திகழ்பவர் திரிஷா.
4. நடிப்பால் ஈர்க்கும் வெண்பா
மேற்கத்திய நடனம் நன்றாக ஆடுவேன். பரதமும் கற்றிருக்கிறேன். நடனத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.