சினிமா செய்திகள்

விஜய்யின் 65-வது படம் ரிலீஸ் தள்ளி வைப்பு + "||" + Vijay's 65th film release postponed

விஜய்யின் 65-வது படம் ரிலீஸ் தள்ளி வைப்பு

விஜய்யின் 65-வது படம் ரிலீஸ் தள்ளி வைப்பு
விஜய்யின் 65-வது படம் ரிலீஸ் தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் 65-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. 2-வது கட்ட படப்பிடிப்பை சென்னையில் வணிக வளாகம் ஒன்றில் படமாக்க திட்டமிட்டனர். இதற்காக வணிக வளாக அரங்கு அமைக்கும் பணிகள் நடந்தன. ஆனால் கொரோனா பரவலால் தொழிலாளர்கள் பாதுகாப்பை கருதி விஜய் அறிவுறுத்தலின் பேரில் அரங்கு அமைப்பதை நிறுத்திவிட்டனர். தற்போது முழு ஊரடங்கை பிறப்பித்து இருப்பதால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் தாமதம் ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் போனால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. படத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். தற்போது ரிலீசை தமிழ் புத்தாண்டுக்கு தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.