சினிமா செய்திகள்

தொழில் அதிபருடன் திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம் + "||" + Married to a business tycoon? Keerthi Suresh Description

தொழில் அதிபருடன் திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்

தொழில் அதிபருடன் திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்
சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடன் கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக மீண்டும் தகவல் பரவி வருகிறது. இதற்கு விளக்கம் அளித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது,
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து அடிக்கடி வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கேரள அரசியல் தலைவர் ஒருவரின் மகனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

பின்னர் இசையமைப்பாளர் அனிருத்தும், கீர்த்தி சுரேசும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்களை கிளப்பியது. அவர்கள் நண்பர்களாக பழகுவதாகவும், காதல் இல்லை என்றும் நெருக்கமானவர்கள் மறுத்தனர். கேரள தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனை கீர்த்தி சுரேஷ் மறுத்தார்.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடன் கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக மீண்டும் தகவல் பரவி வருகிறது. இதற்கு விளக்கம் அளித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “தொழில் அதிபர் ஒருவரை நான் திருணம் செய்து கொள்ள இருப்பதாக வலைத்தளத்தில் செய்தி வெளியாகி இருப்பதை பார்த்தேன். அது எனக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. எனது திருமணம் குறித்து இப்போது சிந்திக்கவே இல்லை. திருமணத்துக்கு இன்னும் காலம் இருக்கிறது. திருமணம் முடிவானதும் உடனடியாக உலகத்துக்கு சொல்லிவிடுவேன். இப்போது எனது முழு கவனமும் நடிப்பின் மீதுதான் உள்ளது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உணர்வோடு இருக்கிறேன். அதை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறேன்'' என்றார்.