சினிமா செய்திகள்

வீடியோ வெளியிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு + "||" + Video released by actor Sivakarthikeyan Corona Awareness

வீடியோ வெளியிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு

வீடியோ வெளியிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு
நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-
“கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி அச்சுறுத்தலையும், நிறைய உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதை தடுப்பதற்காக தமிழக அரசும், சுகாதார துறையும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

நமக்கும் நிறைய விதிமுறைகளை சொல்லி இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது. நான் எனது முதல் தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். வீட்டை விட்டு அவசியம் என்றால் மட்டுமே வெளியே வரவேண்டும். அப்படி வெளியே வரும்போது சமூக இடைவெளியை சரியாக பின்பற்ற வேண்டும். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் போகும்போது முக கவசம் அணிய வேண்டும்.

இதையெல்லாம் கடைப்பிடிப்பது நமது கடமை. கொரோனா பற்றி எந்த பயமும் இல்லாமல் தனது உயிரையும், குடும்பத்தையும் மறந்து நாம் எல்லோருக்காகவும் இந்த கொரோனாவை எதிர்த்து போரிட்டு வரும் முன்கள பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் அதுவாகத்தான் இருக்கும்.

நாம் எல்லோரும் நினைத்தால் நிச்சயம் இதில் இருந்து மீண்டுவர முடியும். ஒன்றிணைவோம். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். நம்மையும் காப்போம். நாட்டையும் காப்போம். கொரோனாவை வெல்வோம்.’'

இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியீடு..!
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2. தனது மகனுக்கு 'குகன் தாஸ்' என பெயர் சூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், தனது மகனுக்கு 'குகன் தாஸ்' என பெயர்சூட்டியுள்ளார்