சினிமா செய்திகள்

ஹன்சிகாவின் ‘மஹா' படத்துக்கு தடையா? + "||" + Is there a ban on Hansika's 'Maha' movie?

ஹன்சிகாவின் ‘மஹா' படத்துக்கு தடையா?

ஹன்சிகாவின் ‘மஹா' படத்துக்கு தடையா?
ஹன்சிகாவின் ‘மஹா' படம் முறையாக முடிக்கப்படவில்லை என்றும், படத்துக்கு கோர்ட்டு தடைவிதித்துள்ளது என்றும் தவறான தகவல் பரவி வருகிறது.
ஹன்சிகா நடிப்பில் தயாராகி உள்ள அவரது 50-வது படம் மஹா. ஜமீல் இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருந்த நிலையில் படக்குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டு கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் மஹா படத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கு பதில் அளித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மஹா’ படம் முறையாக முடிக்கப்படவில்லை என்றும், படத்துக்கு கோர்ட்டு தடைவிதித்துள்ளது என்றும் தவறான தகவல் பரவி வருகிறது. இந்த படத்தின் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இயக்குனர் தரப்பில் தயாரிப்பு தரப்பு மீது சில குற்றங்கள் முன் வைக்கப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மஹா படத்தின் மீது கோர்ட்டு எந்த ஒரு தடையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது. கோர்ட்டு முடிவுக்காக காத்திருக்கிறோம். தற்போதைய பொது முடக்க காலத்தில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு படத்தின் வெளியீட்டு தேதியை சரியான நேரத்தில் வெளியிடுவோம் என்று கூறப்பட்டு உள்ளது.