வயதான நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா


வயதான நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா
x
தினத்தந்தி 22 May 2021 12:32 AM GMT (Updated: 2021-05-22T06:02:08+05:30)

தெலுங்கில் 60 வயதான மூத்த நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க சில நடிகைகள் மறுத்துள்ள நிலையில் திரிஷா நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி வருகிறது

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா பெரிய நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க கவனம் செலுத்துகிறார்.

திரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. அவர் நடித்துள்ள ராங்கி படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேசி வருகிறார்கள். கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் ஒரு மலையாள படம் ஆகியவை கைவசம் உள்ளன.

இந்த நிலையில் தெலுங்கில் 60 வயதான மூத்த நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க சில நடிகைகள் மறுத்துள்ள நிலையில் திரிஷாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினர். திரிஷாவும் படவாய்ப்புகள் குறைந்துள்ளதால் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி வருகிறது

Next Story