சினிமா செய்திகள்

‘திகில்’ படத்தில் நடித்ததற்காக தமன்னா நடிப்புக்கு விருது கிடைக்குமா? + "||" + Will Tamanna get an award for her acting performance in 'Horror'?

‘திகில்’ படத்தில் நடித்ததற்காக தமன்னா நடிப்புக்கு விருது கிடைக்குமா?

‘திகில்’ படத்தில் நடித்ததற்காக தமன்னா நடிப்புக்கு விருது கிடைக்குமா?
தமன்னா, தமிழ் பட உலகுக்கு மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான அவர், திரையுலகுக்கு அறிமுகமாகி 16 வருடங்கள் ஆகிவிட்டன. எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். தொடர்ந்து முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இருப்பதுடன், அதே அந்தஸ்துடன் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் பயணித்து வருகிறார். அவர் இதுவரை 50 படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் அவர், ‘நவம்பர் ஸ்டோரி’ என்ற வெப் தொடரில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது, ஒரு திகில் கதை. இதில் தமன்னா கம்ப்யூட்டரை ஹேக் செய்பவராக நடித்துள்ளார்.

கதைப்படி, தனது தந்தைக்கு சொந்தமான ஒரு சொத்தை தமன்னா விற்க முயற்சிக்கிறார். அந்த முயற்சியின்போது ஒரு கொலை விழுகிறது. அந்த கொலைக்கும், தமன்னாவுக்கும் என்ன தொடர்பு? என்பது ‘சஸ்பென்ஸ்.’இதில் தமன்னாவின் நடிப்பு பேசப்படும் விதமாக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. அவருடைய நடிப்புக்காக பல விருதுகள் கிடைக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலினுக்கு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது
சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான விருது வழங்கும் விழா அமெரிக்காவில் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது.
2. அஸ்வினுக்கு ஐ.சி.சி. விருது..?
இந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது பட்டியலில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.
3. ஐஎம்டிபி தரவரிசை 2021: சிறந்த 10 இணையத் தொடர்களில் தமன்னாவின் " நவம்பர் ஸ்டோரி "
ஐஎம்டிபி தரவரிசையில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த 10 இணையத் தொடர்களில் "நவம்பர் ஸ்டோரி" 9 வது இடத்தை பிடித்துள்ளது.
4. கொரோனா காலகட்டத்தில் தபால் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது
கொரோனா காலகட்டத்திலும் சிறப்பாக பணியாற்றிய தபால் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 89 பேருக்கு சென்னையில் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.
5. இந்திய சர்வதேச திரைப்பட விழா- ஹேம மாலினிக்கு சிறந்த ஆளுமை விருது
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஹேம மாலினிக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.