நலிந்த நடிகர்களுக்கு உதவிய சிவகார்த்திகேயன்


நலிந்த நடிகர்களுக்கு உதவிய சிவகார்த்திகேயன்
x
தினத்தந்தி 24 May 2021 10:00 PM GMT (Updated: 2021-05-25T03:30:20+05:30)

கொரோனா ஊரடங்கினால் திரைப்பட துறையினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சினிமா தொழிலாளர்களுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நிதி திரட்டி உதவிகள் வழங்கி வருகிறார்.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நலிந்த நடிகர்- நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ ரூ.1 லட்சம் நிதி வழங்கி உள்ளார். ஏற்கனவே தமிழக அரசின் கொரோனா தடுப்பு நிதிக்காக ரூ.25 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுபோல் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.50 ஆயிரமும் நடிகை லதா ரூ.25 ஆயிரமும், நடிகர் விக்‌னேஷ் ரூ.10 ஆயிரமும் வழங்கி உள்ளனர்.

நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி முருகன் நலிந்த நடிகர்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கினார். மாவட்டம் தோறும் நாடக நடிகர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

Next Story