சினிமா செய்திகள்

கொரோனாவை ஒழிக்க நடிகர்கள் விழிப்புணர்வு + "||" + Awareness of the actors to eradicate the corona

கொரோனாவை ஒழிக்க நடிகர்கள் விழிப்புணர்வு

கொரோனாவை ஒழிக்க நடிகர்கள் விழிப்புணர்வு
கொரோனாவை ஒழிக்க நடிகர் நடிகைகள் தொடர்ந்து விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
நடிகர் நாசர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா நோய் தொற்றால் கொடுமையான காலகட்டத்தில் இருக்கிறோம். கொரோனா தானாக பரவுவதில்லை. ஒரு மனிதரிடத்தில் இருந்து இன்னொருவருக்கு பரவுகிறது. இந்த சங்கிலியை உடைக்க வேண்டும். அதற்காக ஊரடங்கை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள்'' என்று கூறியுள்ளார்.

நகைச்சுவை நடிகர் யோகிபாபு கூறும்போது, “கொரோனா கிருமி தானாக பரவுவதில்லை. மனிதர்களால் சங்கிலி தொடர்போல ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுகிறது. அந்த சங்கிலியை உடைக்க வேண்டும். நம் உயிரை காக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அரசு விதிகளை பின்பற்றி கொரோனாவை ஒழிப்போம்'' என்று கூறியுள்ளார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் கூறும்போது, “கொரோனா நம்மை ஒரு வருடமாக கஷ்டத்தில் ஆழ்த்தியது. கடந்த வருடத்தை விட இப்போது பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போட வேண்டும். மூக்கையும் வாயையும் மூடி முககவசம் அணிய வேண்டும், துணியால் ஆன முககவசம் பயன் தராது. மருத்துவர்கள் பயன்படுத்தும் முககவசத்தை அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். உறவினர்கள் உங்களை பார்க்க வந்தால் முககவசம் அணிய சொல்லுங்கள். இதை செய்தால் கொரோனாவை சீக்கிரம் விரட்டி விடலாம்’’ என்று கூறியுள்ளார்.