சினிமா செய்திகள்

காதலிக்க நிர்ப்பந்தம் செய்து அனிகாவுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகர் + "||" + Fan forced love and made suicide threats to actress Anika

காதலிக்க நிர்ப்பந்தம் செய்து அனிகாவுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகர்

காதலிக்க நிர்ப்பந்தம் செய்து அனிகாவுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகர்
அஜித்குமாரின் விஸ்வாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா. என்னை அறிந்தால் படத்திலும் அஜித் மகளாக நடித்து இருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக வந்த அவர் தற்போது வளர்ந்துள்ளார். சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்கிறார். இதனால் அனிகாவுக்கு நிறைய ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். அவருக்கு காதல் கடிதங்களும் வருகின்றன. ஒரு ரசிகர் காதலிக்க நிர்ப்பந்தம் செய்து தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த தகவலை அனிகா தெரிவித்து இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் அனிகா கலந்துரையாடினார்.

அப்போது ஒருவர், ''உங்களுடைய தீவிர ரசிகர், உங்களை காதலிப்பதாக சொல்லி அந்த காதலை நீங்கள் ஏற்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்'' என்று கேள்வி விடுத்தார்.அதற்கு பதில் அளித்த அனிகா, ''உண்மையில் எனக்கு ஏற்கனவே அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது. என்னை காதலிப்பதாக சொல்லி ஒரு மெயில் வந்தது. அந்த மெயிலை பார்க்கவே பயமாக இருந்தது. அதை இப்போது நினைவுபடுத்த வேண்டாம். விட்டு விடுங்கள்'' என்றார்.