அவதூறால் வருந்தும் ரகுல் பிரீத் சிங்


அவதூறால் வருந்தும் ரகுல் பிரீத் சிங்
x
தினத்தந்தி 24 May 2021 10:53 PM GMT (Updated: 2021-05-25T04:23:12+05:30)

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“தெலுங்கில் படங்கள் குறையும்போது தமிழ், இந்தி, கன்னட படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதனால்தான் தொடர்ந்து சினிமாவில் நீடிக்கிறேன். எந்த மொழியில் நல்ல கதைகள் கிடைக்கிறதோ அங்கு போய் விடுகிறேன். சினிமாவுக்கு மொழி பேதம் கிடையாது. இந்தி திரையுலக போதை பொருள் வழக்கில் என்மீது குற்றச்சாட்டுகள் வந்தன. இதைவைத்து நிறைய பேர் என்னை தொடர்ந்து அவதூறு செய்தார்கள். தலையும் வாலும் இல்லாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் வந்த கிசுகிசுக்களால் எனக்கு நிறைய இழப்பு ஏற்பட்டது. அதற்காக மிகவும் கஷ்டப்பட்டேன். தாங்க முடியாத அளவு வேதனையும் இருந்தது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கொடுத்தும் அதை நிறுத்தவில்லை. அதனால் என் மீதான கிசுகிசுகளுக்கு விளக்கம் சொல்வதை நிறுத்தி விட்டேன். இப்போது எனக்கு எதிரான கிசுகிசுக்கள் குறைந்துள்ளன.''

இவ்வாறு ரகுபிரீத் சிங் கூறினார்.

Next Story