சினிமா செய்திகள்

விஷாலுடன் நடிக்கிறேனா? பிரியா பவானி சங்கர் + "||" + Am I acting with Vishal? Priya Bhavani Shankar

விஷாலுடன் நடிக்கிறேனா? பிரியா பவானி சங்கர்

விஷாலுடன் நடிக்கிறேனா? பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக மான்ஸ்டர், அருண் விஜய்யுடன் மாபியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்பட மேலும் சில படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் விஷாலின் 32-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் உண்மைதானா என்று ரசிகர் ஒருவர் வலைத்தளத்தில் பிரியா பவானி சங்கரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பிரியா பவானி சங்கர் கூறும்போது, “தற்போதைய சூழ்நிலையில் நானும் விஷால், இயக்குனர் கார்த்திக் ஆகியோரும் எங்களையும் எங்களின் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். இதுபோல் நீங்களும் உங்கள் 
அன்புக்குரியவர்களை பாதுகாக்க வேண்டும். நிலைமை சரியான பிறகு படக்குழு இதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிடும். பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் விஷால் படத்தில் பிரியா பவானி சங்கர் நடிப்பது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தி படத்தில் வில்லனாக விஷால்
தமிழ் நடிகர்கள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.