சினிமா செய்திகள்

கொரோனாவால் டைரக்டர் மரணம் + "||" + Director's death by Corona

கொரோனாவால் டைரக்டர் மரணம்

கொரோனாவால் டைரக்டர் மரணம்
டைரக்டரும் முன்னாள் திரைப்பட தொழிலாளர் சங்க (பெப்சி) தலைவருமான மோகன் காந்திராமனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
டைரக்டரும் முன்னாள் திரைப்பட தொழிலாளர் சங்க (பெப்சி) தலைவருமான மோகன் காந்திராமனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.


மறைந்த மோகன் காந்திராமன் பழம்பெரும் டைரக்டர் ப.நீலகண்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தமிழில் செல்வியின் செல்வன், வாக்குறுதி, ஆனந்த பைரவி, காலத்தை வென்றவன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். மலையாளத்தில் விமோஜன சமரம், சுவர்ண விக்ரகம் ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். பாண்டிய ராஜனுடன் கில்லாடி மாப்பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பண்ண உடையார் மரணம்
பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பண்ண உடையார் மரணம்.
2. தென்கொரிய இளம் நடிகை கிம் மி-சூ திடீர் மரணம்..!
தென் கொரிய நடிகை கிம் மி-சூ தனது 29-ஆவது வயதில் திடீரென மரணமடைந்தார்.
3. கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து மரணம்
கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து மரணம்.
4. பெருந்துயரை அளிக்கும் பிபின் ராவத் மரணம்
“சரித்திரம் திரும்புகிறது” என்பார்கள். அது, இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் வாழ்க்கையிலேயே திரும்பிவிட்டது.
5. எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி மரணம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்
எம்.ஜி.ஆருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அவரது அண்ணன் மகள் லீலாவதி சென்னையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.