சினிமா செய்திகள்

கொரோனா பரவல்: கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா விழிப்புணர்வு வீடியோ + "||" + Corona Spread: Keerthi Suresh, Rashmika Awareness Video

கொரோனா பரவல்: கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா விழிப்புணர்வு வீடியோ

கொரோனா பரவல்: கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா விழிப்புணர்வு வீடியோ
நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, “கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு நாமே சிறுசிறு வழிமுறைகளை ஒழுங்காக பின்பற்றினாலே போதும். தேவையில்லாமல் வெளியே போகாதீர்கள். அப்படியே போனீர்கள் என்றால் கண்டிப்பாக முககவசம் அணிந்து கொள்ளுங்கள்.


அவசியமான இடத்தில் இரண்டு முககவசங்கள் அணிந்து கொள்ளுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். நான் எனது முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள் இன்னும் போட்டுக்கொள்ளவில்லை என்றால் தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக்கொள்ளுங்கள். நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. கொரோனாவை வெல்வோம், மக்களை காப்போம். கொரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்’' என்று கூறியுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா தொற்று காலத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். தற்போதைய சூழ்நிலையில் நேர்மறை உணர்வுகளை பரப்புங்கள். இப்போதைய கஷ்டம் விரைவில் முடிவுக்கு வரும். நோய் தொற்று முடிவது வரை அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். கொரோனா தொற்று நாம் நினைத்து பார்க்க முடியாத வழிகளில் சவால் விடுகிறது. இந்த தருணங்களில் நேர்மறையான எண்ணங்களோடு இருப்பதே இந்த போரை வெல்வதற்கான வழியில் நம்மை செலுத்தும்'’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் தொடக்கம்
கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது
2. ஆட்டோவில் கிராமம் கிராமமாக சென்று முழு ஊரடங்கு குறித்து போலீசார் விழிப்புணர்வு
ஆட்டோவில் கிராமம் கிராமமாக சென்று முழு ஊரடங்கு குறித்து போலீசார் விழிப்புணர்வு
3. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தண்டோரோ அடித்து விழிப்புணர்வு
தடை செய்யப்பட்ட பகுதிகளில் தண்டோரா அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
4. கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
5. வாரச்சந்தையில் கொரோனா விழிப்புணர்வு
வாரச்சந்தையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.