சினிமா செய்திகள்

பிறந்த நாள் பரிசு ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள் + "||" + Karthi appeals to birthday gift fans

பிறந்த நாள் பரிசு ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள்

பிறந்த நாள் பரிசு ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள்
பிறந்த நாள் பரிசு ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள்.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. ஊரடங்கை பின்பற்றி அனைவரும் வீட்டில் இருக்கும்படி நடிகர் நடிகைகள் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.


இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம். இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக்கடுமையாக உள்ளது. அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள முககவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்'' என்று கூறியுள்ளார். கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களில் நடிக்கிறார். கைதி 2-ம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. 16 நாட்களில் 191 பேர் உயிரிழப்பு: கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாக்க விரைவில் தடுப்பூசி போட வேண்டும்
16 நாட்களில் 191 பேர் உயிரிழப்பு: கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாக்க விரைவில் தடுப்பூசி போட வேண்டும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் வேண்டுகோள்.
2. கார்த்தி நடிக்கும் 'விருமன்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
நடிகர் கார்த்தி நடிக்கும் 'விருமன்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
3. முக கவசம் அணிவதில் சென்னை மக்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்
முக கவசம் அணிவதில் மற்றவர்களுக்கு சென்னை மக்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. ஒமைக்ரான் பரவல் குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை: கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்
ஒமைக்ரான் பரவல் குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
5. ‘ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக தொடர ஒத்துழைக்க வேண்டும்’ முன்னாள் அமைச்சர் வேண்டுகோள்
ஜெயலலிதாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக தொடர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தீபா, தீபக்கிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.