சினிமா செய்திகள்

கொரோனா பரவல்: திருமணத்தை தள்ளி வைத்த நடிகை + "||" + Corona spread: Actress who postponed marriage

கொரோனா பரவல்: திருமணத்தை தள்ளி வைத்த நடிகை

கொரோனா பரவல்: திருமணத்தை தள்ளி வைத்த நடிகை
கொரோனா பரவல்: திருமணத்தை தள்ளி வைத்த நடிகை.
தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் முலம் அறிமுகமானவர் மெஹ்ரின். தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுசின் பட்டாஸ் படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

மெஹ்ரினுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை மணக்கிறார். ஓரிரு மாதங்களில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன.


இந்த நிலையில் மெஹ்ரினுக்கும் அவரது அம்மாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா காரணமாக திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மெஹ்ரின் கூறும்போது, “கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் திருமணத்தை நடத்துவது பாதுகாப்பானது இல்லை. எனவே திருமணத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க யோசித்து வருகிறோம்'' என்றார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக மெஹ்ரின் முடிவு செய்துள்ளார். புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
2. கொரோனா அல்லாத நோய்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை: ஒ.பன்னீர்செல்வம்
கொரோனா அல்லாத நோய் சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
3. கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம்: கவிஞர் வைரமுத்து பதிவு
கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
4. கொரோனாவுக்கு 4 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
5. அமீரகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,837 ஆக குறைந்தது
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-