மும்பை புயல் சேதம்: மரக்கன்றுகள் நட்ட கங்கனா ரணாவத்


மும்பை புயல் சேதம்: மரக்கன்றுகள் நட்ட கங்கனா ரணாவத்
x
தினத்தந்தி 28 May 2021 1:27 AM GMT (Updated: 2021-05-28T06:57:02+05:30)

தமிழில் தாம் தூம் படத்தில் கதாநாயகியாக வந்த கங்கனா ரணாவத், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ள தலைவி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழில் தாம் தூம் படத்தில் கதாநாயகியாக வந்த கங்கனா ரணாவத், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ள தலைவி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இதனால் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

சமீபத்தில் கொரோனா தொற்றில் சிக்கி சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். சில தினங்களுக்கு முன்பு மும்பையை தாக்கிய டவ்தே புயலால் ஏராளமான மரங்கள் அழிந்தன. இதையடுத்து கங்கனா ரணாவத் புதிதாக 20 மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மும்பையை தாக்கிய டவ்தே புயலால் 70 சதவீத மரங்கள் சேதமடைந்துள்ளன. குஜராத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழிந்துள்ளன. இதனை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று கேள்வி எழுப்ப வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Next Story