சினிமா செய்திகள்

ராஜமவுலியின் புதிய படம் ‘ரத்தம் ரணம் ரவுத்திரம்’ + "||" + Rajamavuli's new film 'Ratham Ranam Rauthiram'

ராஜமவுலியின் புதிய படம் ‘ரத்தம் ரணம் ரவுத்திரம்’

ராஜமவுலியின் புதிய படம் ‘ரத்தம் ரணம் ரவுத்திரம்’
ராஜமவுலி இயக்கும் புதிய படத்துக்கு, ‘ரத்தம் ரணம் ரவுத்திரம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
தமிழ் பட உலகில், ‘பிரமாண்ட டைரக்டர்’ என்று ஷங்கர் அழைக்கப்படுவது போல் தெலுங்கு பட உலகில், ‘பிரமாண்ட டைரக்டர்’ என்று ராஜமவுலி அழைக்கப்படுகிறார். அவர் இயக்கத்தில் உருவான ‘பாகுபலி, ’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 படங்களும் இதை நிரூபித்தன.

ரூ.250 கோடி செலவில் உருவான அந்த படங்கள், ரூ.1,600 கோடிக்கு மேல் வசூல் செய்தன. இதை யடுத்து ராஜமவுலி, ‘ஆர் ஆர் ஆர்’ என்ற பிரமாண்டமான தெலுங்கு படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன் ஆகிய 3 பேரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். கதாநாயகியாக ஆலியாபட் நடித்திருக்கிறார்.

இந்த படம் ரூ.350 கோடி செலவில் தயாராகி இருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் ‘டப்’ செய்யப்படுகிறது. படத்துக்கு, ‘ரத்தம் ரணம் ரவுத்திரம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.