‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த்; தங்கையாக கீர்த்தி சுரேஷ்


‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த்; தங்கையாக கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 28 May 2021 4:56 PM GMT (Updated: 2021-05-28T22:26:58+05:30)

‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ படம், அண்ணன்-தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட கதை. அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். இவர்கள் இருவர் தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.

ரஜினிகாந்த்-கீர்த்தி சுரேசுடன் நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர்.

சிறுத்தை, வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கியுள்ள சிவா டைரக்டு செய்து இருக்கிறார்.

ரஜினிகாந்த் ஏற்கனவே அண்ணன்-தங்கை பாசத்தை கருவாக கொண்ட ‘தர்மயுத்தம்’ படத்தில் நடித்து இருக்கிறார். அதில் அவர் அண்ணனாகவும், லட்சுமிஸ்ரீ தங்கையாகவும் நடித்து இருந்தார்கள். ‘‘ஒரு தங்க ரதத்தில்...’’ என்ற இனிமையான பாடல் இடம்பெற்ற படம், அது. அந்த படத்துக்குப்பின், பல வருடங்கள் கழித்து அண்ணன்-தங்கை பாச கதையில், ரஜினிகாந்த் நடித்து இருக் கிறார்.

அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்ட படங்கள் எப்போதுமே வெற்றி பெற்றுள்ளன. அதனால், ‘அண்ணாத்த’ படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.

Next Story