சினிமா செய்திகள்

பள்ளியில் பாலியல் தொல்லை: நடிகர் விஷால் கண்டனம் + "||" + Sexual harassment at school: Actor Vishal condemned

பள்ளியில் பாலியல் தொல்லை: நடிகர் விஷால் கண்டனம்

பள்ளியில் பாலியல் தொல்லை: நடிகர் விஷால் கண்டனம்
பள்ளியில் பாலியல் தொல்லை: நடிகர் விஷால் கண்டனம்.
சென்னையில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.


அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகைகள் உள்ளிட்ட பலர் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலைகுனிய வைப்பது மட்டுமின்றி அந்த பள்ளியை மூட வேண்டும் என்பதையும் உணர வைக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் யாரும் ஒருமுறைகூட மன்னிப்பு கேட்கவில்லை. இந்த குற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி எனது நண்பர் அமைச்சர் அன்பில் மகேஷை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விவகாரத்தை சாதி பிரச்சினையாக்குவது இழிவானது. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தவரை தூக்கில் போட வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் இது கடுமையான குற்றம் என்பது தெரியவரும். குறைந்தது இப்போதாவது மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேளுங்கள். இதனை சாதி பிரச்சினையாக மாற்றாதீர்கள்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்ச்சை வீடியோ விவகாரம்: நடிகைகள் கண்டனம்
தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
2. சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவதா? வேல்முருகன் கண்டனம்
சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவதா? வேல்முருகன் கண்டனம்.
3. நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை பணியில் சேர்க்க மறுப்பதா? தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை பணியில் சேர்க்க மறுப்பதா? தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்.
4. பெண்கள் இலவச பயண இழப்பை ஈடுசெய்ய அரசு பஸ்களில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
பெண்கள் இலவச பயண இழப்பை ஈடுசெய்ய அரசு பஸ்களில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
5. மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி பேச்சு: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி பேச்சு: டாக்டர் ராமதாஸ் கண்டனம்.