சினிமா செய்திகள்

'ஜகமே தந்திரம்' படத்தின் முன்னோட்டம் ஜூன் 1ல் வெளியீடு - பட நிறுவனம் + "||" + A preview of 'Jagame Tantram' starring actor Dhanush will be released on June 1 - Film Company

'ஜகமே தந்திரம்' படத்தின் முன்னோட்டம் ஜூன் 1ல் வெளியீடு - பட நிறுவனம்

'ஜகமே தந்திரம்' படத்தின் முன்னோட்டம் ஜூன் 1ல் வெளியீடு - பட நிறுவனம்
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தின் முன்னோட்டம் ஜூன் 1ல் வெளியிடப்படும் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை, 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 22ஆம் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி கவனம் ஈர்ததது. 

படம் ஜூன் 18 ஆம் தேதி வெளியாவதால், ஜூன் 1 ஆம் தேதி படத்தின் முன்னோட்டம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை பல தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டியில் வெளியானாலும் அதிக மொழிகளில் டப் செய்யப்படவில்லை. முதன்முறையாக ஜகமே தந்திரம் 17 மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் டிரைலர் வெளியீடு; கதை என்ன...?
நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.